விபத்துக்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடைபவனி இன்று வாழைச்சேனை பிரதான வீதியில் நடைபெற்றது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்விற்கு வாழைச்சேனை நகர அரிமா கழகம் அனுசரணை வழங்கியது.
குறித்த நிகழ்வில் வாழைச்சேனை அதார வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர்கள்,தாதியர்,சிற்றூழியர்கள் மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு நடைபவனியானது பிரதான வீதி வழியாக வந்து வழைச்சேனை சந்தைப் பகுதியினை சென்றடைந்து அங்கு மக்களுக்கு விபத்தினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான வீதி நாடகத்தினை நடாத்திக் காட்டினார்கள்.அத்துடன் ஒலி பெருக்கி மூலம் விபத்துக்கள் காயங்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டதுடன் துண்டு பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.