( வி.ரி. சகாதேவராஜா)
பாரத நாட்டின் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பெருநாழி இராச்சியத்தின் சிற்றரசரின் மகனாக அவதரித்து காரைதீவில் ஜீவ சமாதி நிலையில் அமர்ந்திருந்து குருவருள் பாலிக்கின்ற ஜீவ சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் குருபூசையும் அன்னதானமும் இன்று (24) திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது என ஆலய பரிபாலன சபைத் தலைவர் சி.நந்தேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு சித்தர் பெருமானின் முத்துச்சப்பிர ஊர்வலம் காரைதீவு தேரோடும் வீதி வழியாக இடம்பெறும்.
நாளை( 25) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அபிஷேகம், கோமாதா பூசை, 210 சித்தர்களுக்குரிய மகா யாகமும் பூசையும் தொடர்ந்து அன்னதானமும் இடம் பெறும்
மாலை 5.00 மணிக்கு திருவிளக்கு பூசை இடம் பெறும் .
நாளை மறுநாள் (26) புதன்கிழமை காலை 05.00 மணிமுதல் காலை 08.00 மணிவரை அடியவர்கள் காரையடிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குடத்துடன் பவனி வந்து சித்தருக்கு தங்கள் கரங்களால் பாலபிஷேகம் செய்யும் நிகழ்வு இடம்பெறும் தொடர்ந்து அபிஷேக பூசை இடம்பெறும்.
10.00 மணிக்கு கூட்டுப்பிரார்தனை (பஜனை) இடம்பெறும்.
மதியம் 12.30 மணிக்கு குருபூசை நிகழ்வு இடம்பெற்று அன்னதான (மகேஸ்வர பூசை) நிகழ்வு இடம்பெறும்.
பி.ப 4.00 மணிக்கு கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும்
மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை சுவாமிகளுக்கான திருவூஞ்சல் நிகழ்வும் தொடர்ந்து கலைநிகழ்சிகளும் இடம்பெறும்.
இறுதியில் 27.07.2023- வியாழக்கிழமை மாலை 07.00 மணிக்கு வைரவருக்கான இடும்பன் பூசையும் வாழிபாடுதலும் இடம்பெறும்.