அனைவரையும் கவர்ந்த வாழைச்சேனை அந்நூரின் நடைபவணி

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த நடைபவணி நேற்று (22) இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இவ் நடைபவணியில் 1989 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்ற ஏராளமான பழைய மாணவர்கள் இந்த நடைபவணியில் கலந்து கொண்டனர்.

பாடசாலை மைதானத்தில் இருந்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் நடைபவணி ஓட்டமாவடி மணிக்கூட்டுக் கோபுர வழியாக சென்று வாழைச்சேனை பொலிஸ் நிலையம், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை ஆகிய வீதிகளால் சென்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் வந்தடைந்தது.

பிரதேச மக்களை கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்ட வாகன பேரணியுடன இந்த நடைபவணி இடம்பெற்றது.

இதில், பாடசாலையில் ஓய்வு பெற்ற அதிபர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் தலைவர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலையின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு பழைய மாணவர்களை ஒன்றிணைத்து நடைபணி, கிரிக்கெட் சுற்றுத் தொடர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார்.