ஊடகவியலாளர்களுக்கு உதவ கிழக்கு ஆளுநர் விசேட திட்டம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களை வெள்ளிக்கிழமை (21) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் ஊடகவியலாளர்களின்
அர்ப்பணிப்புமிக்க சேவையை கெளரவித்து நிதியுதவி வழங்குவதற்கான ஆளுநரின் விசேட கருத்திட்டம் தொடர்பில் அவரால் விபரித்துக் கூறப்பட்டது.

மேலும், ஊடகவியலாளர்கள் கிழக்கு மாகாணத்தினுள் பஸ்களில் இலவசமாக பயணிப்பதற்கான பாஸ் வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்குவதற்கான திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் ஊடக இல்லங்களை அமைப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.