அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 2023 ஆம் ஆண்டுக்கான திருக்கோவில் கல்வி வலய, அகில இலங்கை தமிழ் மொழித்தினம் திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் இன்று வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. K. கமலமோகனதாசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்காக நாற்பதுக்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்குபற்றி அவர்களின் திறமைகளை வெளிக்காட்டிருந்தனர்.
இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. இரா. உதயகுமார் , ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் பபாகரன், வைத்தியர் குணாலினி ஆகியோர் பிரதம ஆதிதியாக கலந்து கொண்டதுடன் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், கல்விமான்கள் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.