கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் பல்வேறு கோரிக்கை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் இருந்து பேரணியாக வருகை தந்த மாணவர்கள் தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய பததாதைகளை ஏந்தியவாறு கோசமட்டு பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு முன்பாக உள்ள ஒரு வழி போக்குவரத்தினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக இருவழிப் போக்குவரத்து தடைப்பட்டு, ஒருவழிப் போக்குவரத்து இடம் பெற்றது, ஏறாவூர் போலீசார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்
குறித்த ஆர்ப்பாட்டம் ஒன்றரை மணித்தியாலத்துக்கு மேலாக நடைபெற்றது. அதிகளவான தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.