மாகாணங்களுக்கு சுயாட்சியை வழங்க வழி வகை செய்யும் 13 ஆவது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு தொடர்ந்து முடக்கி வருவதையும் தமது கடிதத்தில் பிரதமர் மோடிக்கு சுட்டிக் காட்டியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு கடந்த காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை சுட்டிக் காட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கும், சர்வதேச சமுதாயத்திற்கும் இலங்கை தமிழர்களின் தலைவர் ஆர்.என். சம்பந்தன் கடிதம் எழுதியிருக்கிறார்.
நிலப்பறிப்பு மற்றும் பொலிஸ் அதிகாரத்தை பறிப்பதும் இலங்கை அரசின் நோக்கமாக இருக்கிறது.இதன்மூலம் மாகாணங்களுக்கு சுயாட்சியை வழங்க வழி வகை செய்யும் 13 ஆவது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு தொடர்ந்து முடக்கி வருவதையும் தமது கடிதத்தில் பிரதமர் மோடிக்கு சுட்டிக் காட்டியுள்ளார்.
எனவே, ஜூலை 21 ஆம் திகதி இந்திய பிரதமரை சந்திக்க வருகின்ற இலங்கை ஜனாதிபதி விக்கரமசிங்க தங்களது உரிமைகளை வலியுறுத்தி பாதுகாப்பு தர வேண்டுமென்று இலங்கை தமிழ் அமைப்புகளின் செய்தித் தொடர்பாளர் சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியால் இலங்கை தமிழர்களுக்காக போராடி பெறப்பட்ட 13 ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
ஏற்கனவே இந்தியாவுக்கு இலங்கை அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.