அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் பயிற்சிபெற்ற ஆசிரியர்களின் ஒன்றுகூடல்

1987/88ஆம் வருடங்களில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்று வெளியேறிய ஆசிரியர்களின் இரண்டாவது ஒன்று கூடல் நிகழ்வு காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரி மண்டபத்தில் அண்மையில்
ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் சபீல் மௌலவி அவர்களின் வழிகாட்டலில் அதிபர் முஹம்மட் மன்சூர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் விசேட அதிதிகளாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் முஹம்மட் ஜாபீர் , இலங்கை வானொலி வரலாற்றில் ஓர் ஏடு புகழ் அஷ்ஷெய்க் ஏ.ஸி.ஏ.எம். புகாரி மௌலவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டின் நாலா புறங்களிலுமிருந்து இ 87/88இல் பயிற்சி பெற்ற சிரேஷ்ட ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டதுடன் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.நிகழ்வின் இறுதியில் அதிதிகள் கெளரவிப்பும் இடம்பெற்றது.