சம்மாந்துறையில் ஐந்து கல்வி சேவையாளர்கள் கௌரவிப்பு!

(வி.ரி. சகாதேவராஜா)   சம்மாந்துறை  வலயக்கல்விப் பணிமனையில் சேவையாற்றி கல்விப்பணியில் தடம் பதித்து ஓய்வுபெற்ற ஐந்து கல்வி சேவையாளர்களுக்கு  கௌரவிப்புவிழா நேற்று (19) புதன்கிழமை நடைபெற்றது.
சம்மாந்துறை வலய கல்விசார் உத்தியோகத்தர்களின் நலன்புரி ஒன்றிய தலைவரும், உதவி கல்வி பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இக் கௌரவிப்பு விழா செந்நெல் கிராம நைவ் தென்னந்தோப்பில் விமரிசையாக  இடம்பெற்றது.
 பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா  கலந்து சிறப்பித்தார்.
 சம்மாந்துறை வலயத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற  கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்ஏ.சபூர்த்தம்பி, ஆசிரிய ஆலோசகர்களான திருமதி தேவமலர் ராஜேஸ்வரன், கே ரெத்தினஸ்வரன், அல்ஹாஜ் மௌலவி எம் .ஐ .ஹஜ்ஜி முஹம்மத், கே .எம். சவூதூன் நஜ்ஜாஸ் ஆகிய ஐவரும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து மடல் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
 நலம்புரிஒன்றிய செயலாளர் எம் ஐ அஹமட், பொருளாளர் ரஷீத் உள்ளிட்ட நலன்புரி சபையினர் இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
விழாவில் கணக்காளர் சீ.திருப்பிரகாசம், பிரதி, உதவி கல்வி பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள்  வளவாளர்கள் என பலதரப்பினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.