முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 25வது நினைவுப் பேருரையானது சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிருவக பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையில் இராசதுரை அரங்கில் இன்று (19) இடம் பெற்றது.
இந் நிகழ்வில் ஆன்மிக அதிதியாக இராமகிருஷ்ண மிஷன் பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த மஹராஜ் அவர்கள் கலந்து கொண்டதுடன் பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் கலந்து சிறப்பித்தார்.
சிலப்பதிகாரபனுவலின் சமய கருத்தியல்கள் எனும் நூல் இதன் போது வெளியிட்டுவைக்கப்பட்டதுடன், சுவாமி விபுலானந்தர் தொடர்பான நினைவுப்பேருரையை கிழக்கு பல்கலைக்கழக தமிழ் துறை பேராசிரியர் சின்னத்தம்பி சந்திரசேகரம் ஆற்றியிருந்தார்.
இயழ், இசை, நாடக துறையின் வித்தகராகவும் தமிழர்களின் பழம்பெரும் இசை கருவியான யாழ் கருவியினை ஆய்வு செய்து அதன் நுட்பங்களை ஆவனம் செய்த சுவாமி விபுலானந்தரின் சிரார்த்த தினம் இன்றாகும் என்பது குறிப்பிடதக்கது.
இதன் போது நினைவு பேருரையின் திரண்கான் போட்டியில் வெற்றி பெற்ற கனிஷ்டமாணவ மாணவியருக்கு சான்றிழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.