(அஷ்ரப் ஏ சமத்) இலங்கை விமான படையில் உயிர் நீர்த்த ரணவிரு ஞாபகார்த்தமாக இஸ்லாமிய துஆப் பிரார்த்தனை நிகழ்வுகள் இன்று 19.07.2023 கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவும் சகல விமானப்படை அதிகாரிகளும் முஸ்லிம் விமனாப்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின்போது கடந்த கால யுத்தத்தின் போது உயிர்நீத்த விமானப்படை அதிகாரிகள் 5 குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசல் பள்ளி பரிபாலன சபையின் இணைத் தலைவர் அல்ஹாஜ் முஸ்லிம் சலாகுதீன், செயலாளர் ஹாஜி ஹமீத், தலைமையில் நடைபெற்றது மற்றும் ஸ்ரீலங்கா ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷேக் அர்க்கம் நூருல் அமீன், அஷ்ஷேக் பாசில் பாருக், கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல் பிரதான இமாம் மெளலவி ஏ.பி.எம் றிஸ்வான் ஆகியோர்களும் துஆ பிராத்தனை. இஸ்லாமிய சொற்பொழிவுகள் ஆங்கில சிங்கள மொழிகளிலும் நிகழ்த்தினார்கள்.