(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக மனித வள வேலை வாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து நடாத்திய தொழிற் சந்தை மற்றும் தொழிற்கல்வி கண்காட்சி (18) பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இச்சந்தை மற்றும் கண்காட்சியில் அரச மற்றும் தனியார் தொழிற்பயிற்சி, தனியார் தொழில் வழங்கல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய நிறுவனங்ககள் பங்கேற்று தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கின.இதில் நூற்றுக்கு மேற்பட்ட தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, மனித வலு வேலை வாய்ப்பு திணைக்கள மாவட்ட இணைப்பாளர் டபிள்யூ. மைக்கல் கோலின், மாவட்ட செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.கருணாகரன், மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக மனித வள வேலை வாய்ப்பு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.செல்வமலர், அஸ்மி தாஜுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.