ஜனாதிபதி ரணில் தமிழ் கட்சிகள் சந்திப்பில் நேற்று (18/07/2023) நடந்த உண்மைகள்..!
பா.அரியநேத்திரன்
பொலிஷ் அதிகாரம் அற்ற 13, ஐ, அமுல்படுத்துவது அர்த்தமுள்ள அரசியல் தீர்வு இல்லை என இலங்கை தமிழரசுகட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதுடன் பொலிஷ்,காணி, அதிகாரங்களுடன் 13,ஐ அமுல்படுத்தாவிட்டால் அதனை ஏற்கமாட்டோம் என ஜனாதிபதியிடம் கூறினர்.
சம்பந்தன் ஐயா மிகவும் கடும் தொணியில் ஜனாதிபதியிடம் அதிகாரப்பகிர்வு தொடர்பாக அர்தமுள்ள எதனையும் செய்வதற்கு ஜனாதிபதி விரும்புவதாக இல்லை என்ற அர்த்தம் பட பல உண்மைகளை கூறினார்.
சி.வி.விக்கினேஷ்வரன் ஜனாதிபதி ரணில் தரும் பொலிஷ் அதிகாரமற்ற 13,ஐ தாம் ஏற்பதாக கூறினார்.
செல்வம் அடைக்கலநாதன், சித்தாத்தன் எந்த கருத்துக்களையும் இதில் தெரிவிக்கவில்லை.
இதுதான் நேற்றைய சந்திப்பின் சுருக்கம் சம்மந்தர் ஐயாவின் கடுமையான பேச்சுக்கு ஜனாதிபதி ஆத்திரம் அடைந்து முகம் சுழித்தார் என்பதும் உண்மை.
இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டிற்கு உட்பட்டு பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த முழு அதிகாரங்களுடன் 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். (இதில் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் என்ற ஒருகுண்டை ஜனாதிபதி போட்டுள்ளார் நிச்சயமாக இணக்கப்பாடு வராது என்பது அவருக்கு தெரியும்)
ஜனாதிபதி ரணில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாளை மறுதினம் இந்தியா பிரதமர் மோடியுடன் சந்திக்கும் படமும், 13,ஐ நடைமுறைப்படுத்த இலங்கை ஜனாதிபதி ரணிலுக்கு மோடி அழுத்தம் கொடுத்தார் என்ற செய்தியும் காணலாம்!
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக இனப்பிரச்சனை தீர்வுக்கு 13,ம் வாய்பாட்டை ரணில் உச்சரிக்கும் நாடகம் தொடரும், அதற்கு பக்க வாத்தியம் பாட சில தமிழ்தேசிய கட்சிகளை ரணில் பணம் கொடுத்து பயன்படுத்துவார்.
இதுதான் நடக்கும்..!
பார்போம் ..!