பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலய அதிபர் பொறுப்புக்கள் எம்.சி. அப்துல் நஸாரிடம் ஒப்படைப்பு.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)  கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய எம்.எம் முஹம்மட் நியாஸ், மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டதை அடுத்து புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலய அதிபர் கடமைப் பொறுப்புக்கள் அப்பாடசாலையின் பிரதி அதிபராக கடமையாற்றிய எம்.சி.அப்துல் நாஸாரிடம் முன்னாள் அதிபர் எம்.எம்.முஹம்மட் நியாஸ்  (17) கையளித்தார்.
புதிய பாடசாலையில் தனது கடமை பொறுப்புக்களை பொறுப்பேற்பதற்கு முன்னர் தான் கடமையாற்றிய புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலயத்திற்கு சென்ற அதிபர் எம்.எம்.எம்.நியாஸ், அதிபர் கடமைகளை பிரதி அதிபரிடம் கையளித்ததுடன் அங்கு கடமையாற்றிய பகுதி தலைவர்கள் ஆசிரியர்களிடம் பிரியா விடை பெற்று சென்றார்.
இந்நிகழ்வில் கல்முனை வலைய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம், கல்முனை வலைய கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி நஸ்மியா ஸனூஸ் உட்பட பாடசாலை அபிமனிகள் பலரும் கலந்து கொண்டனர்
ஆசிரியர்களின் கண்கள் கலங்க அதிபரை வழியனுப்பி வைத்ததையும் காணக் கூடியதாக இருந்தது.