13/07 வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மனித உரிமை டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
மனித உரிமைகள் கற்கை ஊடாக பல நன்மைகளை மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.மனித உரிமை மீறல்களை கலாசார, சமய மற்றும் சமூக கண்ணோட்டத்தில் அணுகுவதற்கும், பிரதேசத்தில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்களை இனங்கண்டு அதற்கான பரிந்துரை/சட்ட நடவடிக்கை மூலமாக அவற்றை தீர்ப்பதற்கான அறிவையும், திறனையும் மனிதஉரிமை கற்கை நெறி ஊடாக மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பது என்பது இலகுவான விடயம் அல்ல.மனித உரிமைப் பாதுகாவலர்களாக நாம் சந்திக்கும் சவால்கள் பாரதூரமானவை.வடக்கு-கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் கடந்த காலங்களிலும்,தற்போதும் பல மனித உரிமை மீறல்களை கண்டுகொண்டிருக்கிறோம்.
மனித உரிமை கற்கை நெறியை பூர்த்தி செய்து சான்றிதழ்களைப் பெறும் மாணவர்கள் இதனை முடிவாகக் கருதாமல் ஆரம்பமாக கருத வேண்டும்.
நாம் அனைவரும் மனித உரிமைகளை பாதுகாக்க பாடுபட வேண்டும்.சவாலான பாதை என விலகிச் செல்லாமல் சவால்களை சந்தர்ப்பமாக மாற்ற வேண்டும்.
சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையம் ஏழு வருடங்களுக்கு மேலாக வடமாகாணத்தில் மனித உரிமைகளை பாதுகாப்பதனையும்-மேம்படுத்துவதனையும் நோக்கமாக கொண்டு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட பலருக்கு சட்ட உதவிகளை வழங்கி உள்ளோம்.இதற்கு மேலதிகமாக மனிதாபிமான உதவிகளை கூட எமது நிலையம் முன்னெடுத்து வருகிறோம்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
|