மறைந்த நகுலேஸ்வர குருக்களுக்கு ஜனாதிபதியின் இரங்கற் செய்தி

மறைந்த சிவகாம கலாநிதி நகுலேஸ்வர பெருமான் ஆதீன கர்த்தா இராஜஸ்ரீ கு.நகுலேஸ்வர குருக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரங்கற் செய்தியை தெரிவித்துள்ளார்.

மறைந்த குருக்கள் தனது 98வது வயதில் சிவபிராப்த நிலை எய்திய செய்தி மிகவும் கவலையளிப்பதாகவும் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான புகழ் பெற்ற நகுலேஸ்வர பெருமான் ஆதீன கர்த்தா இராஜஸ்ரீ கு.நகுலேஸ்வர குருக்களின் மறைவு இலங்கையின் இந்து பக்தர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.