மறைந்த சிவகாம கலாநிதி நகுலேஸ்வர பெருமான் ஆதீன கர்த்தா இராஜஸ்ரீ கு.நகுலேஸ்வர குருக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது இரங்கற் செய்தி தெரிவித்துள்ளார்.
இலங்கைத் திருநாட்டில் அமைந்த சிவத்தலங்களில் தொன்மை மிக்க சிவத்தலத்தின் சீர்மிகு சிவாச்சார்யாராக இருந்து எழுபத்தைந்து வருடங்களுக்கும் மேலாகச் சிவப்பணி ஆற்றிய பண்பாளர், மகாராஜஸ்ரீ நகுலேஸ்வரக்குருக்கள் அவர்கள். அந்தச் சீர்மிகு உத்தமர், மாறாத புன்னகையோடு வந்தோரை வரவேற்று இறைநாமம் உச்சரித்து ஆத்மார்த்தமாக ஆசீர்வதிக்கும் பண்பு என்றும் மனதில் இடம் பிடித்திருக்கும். இந்தப் பெருமகனாரின் பிரிவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அன்னாரின் ஆத்மா இறைநிழலில் சாந்திபெறப் பிரார்த்திக்கிறேன்.