( வாஸ் கூஞ்ஞ) வட மாகாணத்திற்கு வழங்கப்பட்ட 24 பேருந்துகளில் பொருளாதார இராஜங்க அமைச்சரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளுக்க இணங்க வன்னி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட பத்து பேருந்துகளில் நான்கு பேருந்துகள் மன்னார் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனை வைபவ ரீதியாக இராஜங்க அமைச்சரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் முன்னிலையில் மன்னார் இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளரிடம் சனிக்கிழமை (15) காலை 9 மணியளவில் மன்னார் நகர சபை பொது பேரூந்து நிலையத்தில் வைத்து கையளிக்கப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது.
இப்பேருந்துகள் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் காதர் மஸ்தான் பேரூந்தை இயக்கி பஸ் நிலையத்தை சுற்றியும் வந்தார்.