கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன் திக்கோடை மற்றும் பளுகாமம் பிரதேச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலைகளின் நிலைமைகளை நேரடியாக கண்டறிந்துகொண்டார்.
இந்த விஜயத்தின்போது, வைத்தியசாலையில் நிலவுகின்ற ஆளணி மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்து கொண்டதுடன் அது தொடர்பான விடயங்களையும் நேரடியாக பார்வையிட்டார்.
மேலும், ஆண் நோயளர் விடுதி மற்றும் பெண் நோயளர் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளர்களை நேரடியாக பார்வையிட்டதுடன், அவர்களின் நோய் தொடர்பிலும், அவர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை பராமரிப்பு மற்றும் உணவு வசதிகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.
இந்த விஜயத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணகமுத்து கிருஷ்ணபிள்ளை உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.