அரசாங்க உத்தியோகத்தர்கள் அவர்களது சேவை காலத்தில் இரண்டாம் மொழி பரீட்சையில் சித்தியடைய வேண்டியது கட்டாயமாகும். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஊடாக நடத்தப்பட்ட இரண்டாம் மொழி (சிங்களம்) 150 மணித்தியாலயங்கள் கொண்ட பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் பாடநெறி வளவாளர் ஏ.எச். நாசிக் அஹமட் தலைமையில் (13) நடைபெற்றது.
இதில் பிரதேச செயலகங்கள், பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்களில் கடமையாற்றும் சுமார் 80 உத்தியோகத்தர்கள் குறித்த பாடநெறியை பூர்த்தி செய்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன், உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் கணக்காளர் றிஸ்வி யஹ்ஸர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ரி.கிருபைராசா, நிர்வாக உத்தியோகத்தர் கே. யோகேஸ்வரன், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் எஸ்.சிவம் உட்பட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.