ஆடி அமாவாசை ஆகஸ்ட் 15ல் – இராமசந்திர குருக்கள் பாபு சர்மா.

ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை பட்சம் வருகின்றது. ஒரு சிலருக்கு ஆடி அமாவாசை இரண்டும் வருவதால் ஆடி மாத பிறப்பன்றும் (17-07-2023)அதன் பின் ஆகஸ்ட் 15ம் திகதி வருகின்ற அமாவாசையும் வருவதால் எந்த அமாவாசையில் தர்ப்பனம் செய்ய வேண்டும் என்ற குழப்பம் இருப்பதால் சாத்திர ரீதியாக இரண்டாவதாக வரும் திதியையே கைக்கொள்ள வேண்டும் என்கிறது.

அந்தவகையில் ஆகஸ்ட் 15 ல் வருகின்ற அமாவாசை தினம் அன்று அமாவாசைக்கான தர்ப்பனம் செய்து கொள்ளலாம். அதே நேரம் 15 ஆம் தேதி பகல் 1.40 அளவில் அமாவாசை கூடுகின்றது. மறுநாள் 16ம் திகதி 3.40 மணியளவில் முடிவடைகின்றது. 15ம் திகதி அமாவாசை திதியானது கூடுதலான நேரம் வியாபித்து உள்ளதால் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆடி அமாவாசையாக கைக் கொண்டு விரதம் இருந்து தந்தை வழி முன்னோர்களை நினைத்து தானங்கள், தர்மங்கள், தர்ப்பனம் மோட்ச விளக்கேற்றி வழிபாடு செய்வது நல்லதாகும்.