அரிசி ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான இந்தியா, அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பல அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாகக் தெரியவந்துள்ளது. பாசுமதி தவிர்ந்த அனைத்து வகை அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.