முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 பெண்களுக்கு வாழ்வாதார உதவி

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைபற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு சிலாவத்தை முள்ளி வாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் காணப்படுகின்ற பத்து பெண்களுக்கு சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திகான நிறுவனத்தினால் வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்பட்டது.

இத்திட்டமானது புதன்கிழமை (12) இடம்பெற்றது.

வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குறித்த பத்து பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நிலையில் கருவாடு பதனிடுதல் வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் ஒரு நபருக்கு 30000 ரூபா பெருமதியான கருவாடு பதனிடும் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் எக்டோ நிறுவன மேலாளர் கணபதி பிரசாந்த் மற்றும் நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.