களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக் குழ கூட்டத்தில் சாணக்கியன் மற்றும் பிள்ளையான் பங்கேற்பு.

(எருவில் துசி) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்தி
கூட்டம் இன்று(12) களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி குழு தலைவர் இறாஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் போது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரியிடம் பிரதேசத்தில் உள்ள LRC காணி விபரம் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் மேலதிகமாக காணி காணப்படின் காணியற்ற குடும்பங்களுக்கு பகிர்தளிப்பது பொருத்தமுடையதாகும் என கலந்துரையாடப்பட்டது.

மேலும் ஒவ்வெரு திணைக்களங்களிடமும் அவர்களது கடந்த கால எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆரயப்பட்டது.

இரா. சாணக்கியன் அவர்களினால் கடந்த கால கூட்டங்களில் பேசப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது தொடர்பாக வினவப்பட்டதுடன் எருவில் கிழக்கு பகுதியில் மழை காலத்தில் கடியிருப்பு பிரதேசம் பாதிக்கப்படுவது தொடர்பாக ஆராயப்பட்டு பெரியகுளத்தின் நீர் மட்டத்தினை விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்குமாறு அதிகாரிகளை பணிக்கப்பட்டதும்

குறிப்பிடத்தக்கது.