(அஸ்ஹர் இப்றாஹிம்) பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை )
களுவாஞ்சிகுடி 2023 தமிழ்மொழித்தின கோட்டமட்ட போட்டிகளின் முடிவுகளின்
படி பதினொரு முதலாம் இடங்களையும் எட்டு இரண்
டாம் இடங்களையும் இரண்டு மூன்றாம் இடங்களையும் பெற்று
வலயமட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
மேற்படி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த
ஆசிரியர்களையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலை வளாகத்தில் பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது.