மலேசியா உயர்ஸ்தானிகருக்கும் கிழக்கு ஆளுனருக்கும் இடையில் விஷேட சந்திப்பு

மலேசியா உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் எடம் மற்றும் கொழும்பில் உள்ள மலேசியாவின் சான்சரி உயர்ஸ்தானிகராலயத்தின் தலைவர் அனூரின் இக்னேஷியஸ் ஆகியோர் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சந்திப்பு திருகோணமலையில் உள்ள ஆளுனரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கிழக்கு மாகாணத்திற்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் கூட்டு வளர்ச்சி குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இதில் ஆளுனரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க , மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, மாகாண சுற்றுலா பணியக தலைவர் ஏ.பி.மதனவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.