பாடசாலை பைகளை விநியோகிக்கும் நிகழ்வு.

(ஏறாவூர் நிருபர்-  நாஸர்)  சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் அமைச்சர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பகிர்ந்தளித்த நானூறு பாடசாலை பைகளை விநியோகிக்கும் நிகழ்வு  11.07.2023 ஏறாவூரில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மத்தி வலக்கல்விப்பணிப்பாளர் எஸ்எம்எம். அமீர் தலைமையில்  நகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்;          பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.
காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் கோறளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேசங்களிலுள்ள இருபத்தேழு பாடசாலைகளின் பொருளாதாரம் குறைந்த நானூறு  மாணவர்களுக்கான இந்த  பைகள் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி றிப்கா ஜெயினுதீன், தாஜுன்னிசா, அஜ்மீர் மற்றும் ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எம்எச்எம். ஹமீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இப்புத்தகப் பைகள் இலங்கை-சீன நற்புறவுத்திட்டத்தின்க         சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.