அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகத்தான கெளரவம்.

( அஸ்ஹர்  இப்றாஹிம்)   அம்பாறை மாவட்டத்தில் பிறந்து,அம்மாவட்டத்திலே கல்வி கற்று, அம்பாறை அரசாங்க அதிபராக கடமையாற்றிய முதலாவது அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமைக்குரிய ஓய்வுபெற்ற முன்னாள் அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் அவர்களுக்கு  சிறுவயதிலிருந்தே கற்பித்த ஆசிரியர்களால் மகத்தான வரவேற்பும் கெளரவமும் வழங்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அவரது பாடசாலை நண்பர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.