(அஷ்ரப் ஏ சமத்) பௌத்த மற்றும் மதவிவகாரம் கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க – ஈரான் கலாச்சார நிலையத்தின் கவுன்சிலர் கலாநிதி மௌசாமி கொடரசி இடையிலான சந்திப்பு கொழும்பு ஈரான் கலாச்சார நிலையத்தில் 10.07.2023 நடைபெற்றது.
இச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிலான கலை. கலாச்சாரம், புராதன அடையாலச் சின்னங்களை டிஜிட்டல் தொழில்நுட்ப முறையிலான பாதுகாத்தல் அது பற்றிய நவீன தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொள்ளல். அத்துடன் இத்துறை சார்ந்த இரு நாடுகளில் பயிலும் உயர்கல்வி மாணவர்களுக்கு .கல்விச் சுற்றுலா ஆராய்ச்சி போன்ற விடயங்கள் ஈடுபடுத்தல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கக தெரிவித்தார்.