தொடர் பேரூந்து விபத்து – கவிழ்ந்த சுற்றுலா பேரூந்து

புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் ஹெல்பொட பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலாவுக்குச் சென்ற பயணிகளே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.

காயமடைந்த 20 பேரில் நால்வர் கொத்மலை பிராந்திய வைத்தியசாலையிலும் மேலும் நால்வர் புஸ்ஸல்லாவ வஹுகபிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி தூங்கியதால் விபத்து நடந்திருக்கலாம் என விசாரணையின் போது இதனை புசல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.