மன்னம்பிட்டி பஸ் விபத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

பொலன்னறுவை கதுருவெல பிரதேசத்தில் இருந்து கல்முனை வரையிலான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ்வண்டி மன்னம்பிட்டி கொட்டலி பாலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு வேககட்டுப்பாட்டை மீறி பாலத்தில் இருந்து கீழ் வீழ்ந்ததில் இரு பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சாரதியை கைது செய்துள்ளதாக மன்னம்பிட்டி பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது

குறித்த தனியார் பேருந்துபஸ்வண்டி வழமையாக தினமும் பொலன்னறுவை கதுருவெலவில் இருந்து இரவு 7.50 மணிக்கு ஆரம்பித்து கல்முனையை நோக்குp பிரயாணத்தில் ஈடுபடும் பஸ்வண்டி சம்பவதினமான நேற்று இரவு வழமைபோல பிரயாணத்தை ஆரம்பித்த நிலையில் பஸ்வண்டியில் இருக்கைகள் உட்பட 60 மேற்பட்டோர் பிரயாணம் செய்துள்ளனர்

இந்த நிலையில் குறித்த பஸ்வண்டி அதிவேகமாக இன்னொரு பஸ்வண்டியை முந்தியடித்துக் கொண்டு சென்ற நிலையில் மன்னம்பிட்டி கொட்டலி பாலத்தில் வேகட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி ஆற்றில் வீழ்ந்ததையடுத்து அதில் இருந்த பயணிகள் ஆற்று நீரிழ் முழ்கியதையடுத்து பலர் பஸ்வண்டியில் இருந்து வெளியேற முடியாமல் போயுள்ளதுடன் காப்பாற்றுமாறு அழுகுரல்கள் குரல்கள் ஒலித்தன.

இதன் போது பொலிசார் இராணுவத்தினர் வீதியால் வாகனங்களில் பிரயாணிதவர்கள் பொதுமக்கள் ஒன்றினைந்து ஆற்றில் வீழ்ந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதுடன் காயமடைந்தவர்களை பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தில் சம்பவதினமான நேற்றைய தினம் ஏறாவூரைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 3 பேரும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் மற்றும் ஆனைமடுவ கலாவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த இரு பல்கலைக்கழக மணவர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்துள்துடன் சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை பகல் ஒரு பெண் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு 12 பேராக அதிகதித்துள்ளது

இதேவேளை; காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 40 பேரில் சிலர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் இந்த விபத்தின் போது சிறு காயங்களுக்குள்ளான நிலையில் தப்பிய ஊடகவியலாளர் ஒருவர் உட்பட சிலர் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்த பொலிசார்

குறித்த பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளதுடன் சாரதி ஏற்கனவே ஆபத்தான முறையில் சாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளவர் எனவும் இவர் போதை பொருள் பாவித்துள்ளாரா என விசாரணை முன்னெடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைளை மன்னம்பிட்டி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்;.