மட்டக்களப்பு- வாகரை – மாங்கேணி கடற்கரைப்பிரதேசம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ஹேலீஸ் விவசாய நிறுவனத்தினால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
உலகலாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘பூச்சியம் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்’ திட்டத்திற்கு இணைவாக அரசாங்கத்தினால் பல்வேறு செயல் திட்டங்கள் அமுல்செய்யப்பட்டுள்ளன.அத்துடன் கிழக்கு மாகாணத்தில் உல்லாசப்பயணத்துறையினை ஊக்குவிக்கும் திட்டத்தினையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.இத்திட்டங்களுக்கு ஆதரவளிக்குமுகமாக கடற்கரைப்பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஏகே. பத்தேகம தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிறைவேற்று அதிகாரி எஸ்கேஎன்எப். சிறிவர்தன மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மாங்கேணி பிரதேச கடற்கரையின் சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம் இதன்போது சுத்தம் செய்யப்பட்டது.இதன்போது சுமார் ஐந்து தொன் எடையுள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் பொருட்கள் இருநூறு பைகளில் சேகரிக்கப்பட்டன.
இப்பொருட்கள் கடலிலிருந்து கரையொதுங்கியவையாகும்.