நாட்டில் கடந்த வருடம் இடம்பெற்ற ஜூலை 9 சம்பவம் தொடர்பாக அரசியல்வாதிகள் எழுதி வரும் நூலால் பரபரப்பு காணப்படுகிறது என்று தென்னிலங்கை தரப்புகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன கடந்த வருடம் ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து நூல் ஒன்றை எழுதி வருகிறார்.
இந்த விடயம் தொடர்பாக விமல் வீரவன்ச எழுதிய நூல் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அதனால்தான் வஜிர என்ன எழுதுகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழும்பத் தொடங்கியுள்ளது.
உதய கம்மன்பில மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் இந்தத் தொடர் நிகழ்வுகள் தொடர்பான நூல்களை எழுதி வருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
நூல் எழுதுவது ஒருபுறமிருக்க, இந்த சம்பவம் குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.