முல்லைத்தீவு மனித புதைக்குழி – அடுத்தகட்ட நடவடிக்கை என்ன..?

முல்லைத்தீவு மனித புதைக்குழி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 13ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அகழ்வு பணிகளுடன் தொடர்புடைய அனைத்தும் தரப்பினரும் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த மாதம் 29ம் திகதி நீர்குழாய் பொருத்து பணிகளுக்காக வீதியோரத்தில் குழியொன்று தோண்டப்பட்ட சந்தர்ப்பத்தில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் மனித எலும்பு எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, இந்த விடயம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, நீதவானின் கண்காணிப்பில் கடந்த 6ம் திகதி குறித்த இடம் தோண்டப்பட்டது.

இந்த இடத்தில் மனித புதைக்குழி காணப்படுகின்றமையை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே கடந்த 6ம் திகதி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அன்றைய தினம் மனித எச்சங்கள் காணப்படும் 13 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அடுத்த கட்ட பணிகளுக்காக அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 13ம் திகதி நடைபெறும் கலந்துரையாடலை அடுத்து, அகழ்வு பணிகளை மேற்கொள்ளும் விதம் குறித்து தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.