முதலிடத்தை பெற்றது இராமகிருஸ்ணா

முனைக்காடு இராமகிருஸ்ண விளையாட்டுக்கழகத்தின் 54வது ஆண்டு நிறைவை சிறப்பித்தும் உயிர்நீத்த உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் சம்பியனானது.
கடந்த 7,8,9 ஆம் திகதிகளில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 36அணியினர் பங்கேற்றிருந்தனர்.

போட்டியின் இறுதிப்போட்டிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா அணியினரும் மகிழடித்தீவு மகிழை இளைஞர் அணியினரும் தெரிவாகி 1:0 என்ற கோள்கள் வித்தியாசத்தில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் வெற்றிவாகை சூடியது. மகிழை இளைஞர் அணி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது
இப்போட்டியின் இறுதி நிகழ்ச்சிக்கு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களையும், பரிசில்களையும் வழங்கி வைத்தார்.