மட்டு தன்னாமுனையில் முச்சக்கரவண்டி விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழப்பு 3 பேர் படுகாயம் —

(கனகராசா சரவணன்))

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதானவீதி தன்னாமுனையில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று (09) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேகக்கட்டுப்பட்டை மீறி வீதியில் தடம்புரண்டு வாவிகரை கட்டுடன் மோதிய விபத்தில் ஒருவயதும் 3 மாதம் கொண்ட குழந்தை ஒன்று உயிரிழந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பாலமுனையைச் சேர்ந்த ஒரு வயதும் மூன்று மாதங்களுமுடைய  பாத்திமா  மைஸ்ஹறா எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி பாலமுனையைச் சேர்ந்த குடும்பமம் ஒன்றைச் சேர்ந்த 4 பேர் சம்பவதினமான இன்று பிற்பகல் 2 மணிக்கு ஏறாவூரை நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது  மட்டக்களப்பு ஏறாவூர் பிரதான வீதி தன்னாமுனையில் வேககட்டுப்பாட்டை மீறி வீதியில் தடம்புரண்டு வீதியை விட்டு விலகி வாவிகரை கட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து கீழே வீழ்ந்த குழந்தை மீது முச்சக்கரவண்டி ஏறியதையடுத்து குழந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் குழந்தையின்  தாய் உட்பட இரு பெண்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்