வெருகலில் சமஷ்டி தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் சமஷ்டி தொடர்பான கருத்தாடல் நேற்று (07) மாலை வெருகலில் இடம்பெற்றது.

இதன்போது அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் அ.மதன் அவர்களினால் சமஷ்டி தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு நூறு நாள் செயற்திட்டத்தின் இறுதியில் வெளியிட்பட்ட “மக்கள் பிரகடனம்” தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு மக்களுடைய கருத்துக்களும் பெற்றுக் கொள்ளப்பட்டன.இதில் கிராமத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.