நாங்கள் என்ன மொக்கு நாட்டாமையா?.இது சுகுணனின் கேள்வி.

கண்டவன் நிண்டவனெல்லாம் எதுவித அடிப்படை அறிவுமில்லாது கொட்டல்களை ஆரம்பித்துவிட்டு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக நிற்கிறார்கள். இதை கைகட்டி பார்த்துக்கொண்டு நிற்க நாங்கள் என்ன மொக்கு நாட்டாமையா என்ன? என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்று மட்டுநகரில் 37 கோட்டல்கள் அதிரடி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பல இலட்சம் ரூபா பெறுமதியான பாவனைக்குதவாத சமைத்த , சமைக்காத உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது தொடர்பாக கருத்தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்

குறிப்பிட்ட சோதனை தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

உணவே மருந்தானது அந்தக்காலம் ஆனால் அது நஞ்சாக்கப்பட்டு மனிதர்கள் நோயாளிகளாக்கப்படுத்தப்படுவது இந்தக்காலம்.
மட்டக்களப்பு நகரம் சார்ந்த அநேக மக்களின் வாழ்வியலில் தினந்தோறும் இந்த கோட்டல்கள் தயாரிக்கும் உணவுகளும் ஒரு அங்கமாகிவிட்டது. நகரமயமாக்கலின் விளைவினாலும் மனிதர்கள் வகுத்துக்கொண்ட முறைமையினாலும் இது ஏற்பட்டுவிட்டது.
போசனையான, பாதுகாப்பான உணவை கொடுப்பதில் இந்த கோட்டல்களின் உரிமையாளர்கள் பெரும்பொறுப்பை கொண்டுள்ளார்கள்.
இலங்கையில் 80% ற்கு அதிகமான இறப்புகள் பிறசர், இதயஅடைப்பு, நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரகநோய் என்பவற்றினாலேயே ஏற்படுகின்றது. இதைவிட இவர்கள் வாழ்நாள் பூராக நோயாளிகளாகவே காணப்படுகிறார்கள்.

11 கடைகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டதுடன் 10 கடைகளுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
பல அரசியல்வாதிகள், பல அதிகாரிகள், நண்பர்களின் எதிர்ப்பை சந்தித்துக் கொண்டாலும் உணவுப்பாதுகாப்பு விடயத்தில் துளியளவும் விட்டுக்கொடுப்பும் இல்லாது மாவட்டத்தின் ஏனைய நகரங்களை நோக்கி நகர தயாராகுகின்றோம் என அலர் மேலும் தெரிவித்துள்ளார்.