நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு.

நிரந்தர மற்றும் சேவையில் இருக்கும் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளினதும் நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர்களை சமாதான நீதவான்களாக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தின் பிரிவு 45(1A) உடன் வாசிக்கப்பட்ட பிரிவு 61 இன் கீழ் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.