இறால் வளர்ப்பு திட்டத்தினை நிறுத்தக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் வட்டவானில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறால் வளர்ப்பு திட்டத்தினை நிறுத்தக் கோரி பிரதேச மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடடனர்.

மாங்கேணி காயன்கேணி வட்டவான் மற்றும் ஆலங்குளம் இறாலோடை போன்ற பிரதேச மீனவ அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்திருந்தனர்.அப்பகுதி நன்னீர் மீன்பிடிப்போரும் அன்றாடம் ஜீவனோபாய தொழிலை மேற்கொள்ளும் மக்களும்பாதிக்கப்படுவதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் ஆர்ப்பாட்டமும். பேரணியும் இடம்பெற்றது

காயன்கேனி பழைய பாலத்திலிருந்து ஆரம்பமாகி திருமலை வீதி ஊடாக சென்று வட்டவான் இறால் பண்ணைக்கு சென்று பண்ணை முன் பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பினார்கள்.
‘அசுத்தப்படுத்தாதே வாவி நீரை அசுத்தப்படுத்தாதே’

‘அழிக்காதே அழிக்காதே மீன் வளத்தை அழிக்காதே’
‘சுத்தமான காற்றை சுவாசிக்க விடு’ ‘மீனவரின் வாழ்வாதாரத்தை அழிக்காதே ‘ என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபடடனர்.

குறித்த இறால் பண்ணையின் அருகில் அமைந்துள்ள வாவி அசுத்தமடைந்து வருவதாகவும் குறித்த இறால் பண்ணையில் இருந்து திறந்து விடப்படும் அசுத்த நீரினhது ஆற்றில் கலக்கப்படுவதனால் மீன்கள் இறந்து காணப்படுவதுடன் மீன் இறால் வளங்கள் அழிந்து கொண்டு போவதினால் தாங்கள் பொருளாதார ரீதியில் பின்நோக்கி போவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

தாங்கள் யாரிடம் முறையிடுவது என்றும் தெரியாமல் உள்ளதாகவும் இதனை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இதனை கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும்இஇப் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் கடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இவ்விடயம் பற்றி கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்ட காரர்கள் கருத்துக்களை தெரிவித்து கலைந்து சென்றார்கள்