கல்வியமைச்சின் செயலாளர் திஸாநாயக வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலைக்கு விஜயம்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் H.E.M.W.G.திஸாநாயக காவத்தமுனையில் அமைந்துள்ள வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலைக்கு விஷேட கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

ஜெர்மன் நாட்டின் தொழிநுட்பத்தில் 1951ம் ஆண்டு அப்போதைய கைத்தொழில் அமைச்சர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டு 1956ம் ஆண்டு முதல் உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்ட இத்தொழில் பேட்டையினை பார்வையிட்டதுடன், கடதாசி ஆலையின் நிறைவேற்று அதிகாரியான ஓய்வுபெற்ற முன்னாள் கேணல் எஸ்.பீ.சுதர்மஸ்ரீ தற்போதைய உற்பத்திகள் தொடர்பாக விரிவாகத் தெளிவுபடுத்தினார்.

இதன் போது காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய உப அதிபர் ஆர்.ஜுனைதீன் மற்றும் ஆசிரியர் எம்.எம்.செய்னுதீன் ஆகியோரும் உடன் பிரசன்னமாகிருந்தனர்.