நாளை முதல் மூடப்படும் கல்வி வலையம்

நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளையும் (6) நாளை மறுதினமும் (7) மூடப்படும் என வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன்,சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் நாளை மறுதினம் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடசாலை நாட்களுக்கு பதிலாக எதிர்வரும் வாரங்களில் 2 நாட்கள் பாடசாலை நடாத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.