இலங்கையினுடைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், தென்மராட்சி வீட்டிற்கு சினேகித பூர்வமான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணத்திற்கு நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால மறவன்புலவு சச்சிதானத்தின் அன்பு அழைப்பின் பேரில் வீடு தேடிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்திப்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,சுதந்திர கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டிவாஸ் குணவர்த்தன மற்றும் அங்கஜன் இராமநாதனுடைய இணைப்புச் செயலாளர் கு.சிவராம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.