இலங்கையில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளிலிருந்தும் அரசாங்கம் ஏறக்குறைய 100 ரூபாவை வரியாகப் பெற்று வருகின்றது.
அதன்படி ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றருக்கு 100.27 ரூபாவும், ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றருக்கு 122.36 ரூபாவும், லங்கா ஒடோ டீசல் லீற்றர் ஒன்றுக்கு 74.99 ரூபாவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றருக்கு 97.98 ரூபாவும், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 2.95 ரூபாவும் வரி அறவிடப்படுகிறது. .
இதேவேளை, எரிபொருள் விலை திருத்தத்துடன், எரிபொருள் விற்பனை மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இலாபம் கிடைத்துள்ளது.
இதனால், ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றருக்கு 0.42 ரூபாவும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றருக்கு 2.82 ரூபாவும், லங்கா ஒடோ டீசல் லீற்றருக்கு 0.45 ரூபாவும், சுப்பர் டீசல் லீற்றருக்கு 0.47 ரூபாவும், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 0.09 ரூபாவும் இலாபமாக அரசாங்கத்திற்கு கிடைக்கின்றது.