மட்ட க்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய பெண்கள் உதைப்பந்தாட்ட அணி மாவட்டத்தில் சாதனையை நிலைநாட்டியுள்ளது.
வேல்முருகன் வினியோக நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உதைபந்தாட்ட துறையில் பெண்களை வலுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.
இதில் குறித்த பாடசாலை இரண்டாம் இடத்தினை பெற்று சாதனையை நிலை நாட்டியுள்ளது.