யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மொரவ பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சாரதியின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த வித்தில் பேருந்தின் நடத்துநர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது.
பஸ்ஸில் பயணித்த இளைஞரொருவர் படுகாயம் அடைந்த நிலையில் அவருடைய இரு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இவ்வாறு படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பரதன் (33வயது) என்பவரே படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.