பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவிகள் உதைபந்தாட்ட அணி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பிரகாசிப்பு

(அஸ்ஹர் இப்றாஹிம்)

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)களுவாஞ்சிகுடியின் 17 வயதிற்குட்பட்ட மகளிர் உதைபந்தாட்ட அணியினர் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டனர்.

வேல்முருகன் வினியோக நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உதைபந்தாட்ட துறையில் பெண்களை வலுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.

இச்சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முன்னணி பாடசாலைகள் கலந்து கொண்டிருந்த போதிலும் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலம் ( தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடி மாணவிகள் தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.