( அ.அச்சுதன் )
சர்வதேச மனித நேய அமைப்பான முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் முன்மாதிரிக் கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலை கல்வி மேம்படுத்தும் நோக்குடன் சுமார் 472 கதிரைகள் மற்றும் 250 மேசைகள்
புல்மோட்டை சதாம் முஸ்லிம் வித்தியாலயம், அரபாத் முஸ்லிம் வித்தியாலயம், சலாமியா முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் ஜின்னாபுரம் கலவன் பாடசாலைகளுக்கு சுமார் இரண்டு மில்லியன் செலவில் பாடசாலை கதிரைகள் மற்றும் மேசைகள் திருத்தி அமைக்கப்பட்டு புது பொலிவுடன் பாடசாலைகளுக்கு மீண்டும் புதன்கிழமை (28) ஒப்படைக்கப்பட்டன.
மேற்படி பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் மிகவும் வறிய பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்தவர்களாகும். சுமார் 13 வருடங்கள் மேற்படி பாடசாலை மாணவர்கள் போதிய தளபாட வசதிகள் இன்றி துன்பம் அனுபவித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வு பாடசாலைகளின் அதிபர்களின் தலைமையில் இடம்பெற்றது அத்துடன் இந் நிகழ்வில் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்வர் மற்றும் முஸ்லிம் எயிட் நிறுவன உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள், புல்மோட்டை 04 முன்மாதிரி கிராம அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.