அரசாங்க நிதி தொடர்பான குழு முன்வைத்த நிபந்தனை புறக்கணிப்பு : ஹர்ஷ டி சில்வா

அரசாங்க நிதி தொடர்பான குழு முன்வைத்த நிபந்தனை நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப் படாமை தொடர்பாக அக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் அமைச்சரவைக்கு வழங்கிய தெளிவுபடுத்தல் தேசிய கடன் மறுசீரமைப்பு கொள்கைத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த, ஹர்ஷ டி சில்வா முன்வைத்த நிபந்தனைக்கு அமைய மத்திய வங்கி ஆளுநர் அமைச்சரவைக்கு ஆற்றிய தெளிவுப்படுத்தல் செயற்திட்ட அறிக்கைக்குள் நேரடியாக உள்வாங்கப்படும் என அறிவித்தார்.