தேசிய கடனை மறுசீரமைக்க போவதில்லை என அரசாங்கம் தொடர்ந்தும் கூறினாலும் அது பச்சை பொய் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச இறையாண்மை பிணைமுறி உரிமையாளர்கள் குழுவால் முன்வைக்கப்பட்ட நிபந்தனையான தேசிய கடன் இரத்துச் செய்யப்படும் என அமைச்சரவை பத்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மக்களை ஏமாற்றும் அரசாங்கம் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் மீது மக்களுக்கு துளியும் நம்பிக்கையில்லை.
தனியார் துறையில் தொழில் புரியும் மக்கள் சம்பாதிக்கும் பணம் தொடர்பாக பலவந்தமான தீர்மானத்தை எடுக்க உள்ளனர்.
இந்த துன்பத்தை முறை எந்த இடமும் இல்லை. இந்த விடயம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அது எதிர்வரும் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.
அப்படியான தருணத்தில் நாடாளுமன்றத்தில் தேசிய கடனை மறுசீரமைப்பது தொடர்பான விவாதத்தை நடத்துவது பொருத்தமற்றது எனவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.